இரட்டை இலை விவகாரம்!! தீர்ப்பு அளித்த நீதிபதிகள்!!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீதிமன்ற வாயிலாகவும் தேர்தலானையும் வாயிலாகவும் தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வசம் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய சூரியமூர்த்தி அதிமுகவில் உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதில் முடிவு கிடைக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் வழங்கக்கூடாது என தெரிவித்து இருந்தார்.இரட்டை இலை விவகாரம்!! தீர்ப்பு அளித்த நீதிபதிகள்!!

பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்திற்கு சூரியமூர்த்தி கடிதம் எழுதி இருந்த நிலையில் அது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்க கூடாது என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் குமரப்பன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இந்த விண்ணப்பத்தின் மீது அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் நான்கு வாரத்திற்குள் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.இரட்டை இலை விவகாரம்!! தீர்ப்பு அளித்த நீதிபதிகள்!!

எந்த நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா  மற்றும் மனுதாரர் சூரியமூர்த்தி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இவ்வகாரத்தில் விளக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இரட்டை இலை விவகாரம் தொடர்பாக வரும் டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் எழுத்து பூர்வமான விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் டிசம்பர் 23-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சூரியமூர்த்தி உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து தரப்பினரும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.