BLOOD-இல் படிந்துள்ள கழுவிகளை வடிகட்டி வெளியில் அனுப்பும் ட்ரிங்க்!! ஜஸ்ட் ஒன் கிளாஸ் குடிங்க போதும்!!

Photo of author

By Divya

நாம் வாழும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை,பின்பற்றும் மோசமான உணவுமுறை பழக்கம்,மாசுபாடு போன்ற காரணங்களால் இரத்தத்தில் அதிக கழிவுகள் தேங்குகிறது.இவ்வாறு படியும் அழுக்கு மற்றும் நச்சுக் கழிவுகளால் உடல் இயக்கம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.

உடலில் உள்ள உறுப்புகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்காமல் பல நோய் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும்.இரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

நம் உடலின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்று உட்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற மூலிகை தேநீர் செய்து பருகலாம்.

வேம்பு தேநீர்

பாத்திரத்தில் ஒரு கொத்து வேப்பிலை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

வெந்தய தேநீர்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து அந்நீரை கொதிக்க வைத்து வடித்து பருகி வந்தால் இரத்தம் தூய்மையாகும்.

பாகற்காய் தேநீர்

ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பாகற்காயை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

பூண்டு தேநீர்

இரண்டு பல் வெள்ளை பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள அழுக்குகள் வடிகட்டப்பட்டுவிடும்.

மாதுளை தோல் தேநீர்

பாத்திரம் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி லேசாக சூடுபடுத்தவும்.பிறகு ஒரு தேக்கரண்டி மாதுளை தோல் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்கிவிடும்.