ஆண்களிடையே அதிகரித்து வரும் விந்தணு குறைபாட்டை தவிர்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பவர்புல் வைத்தியம் உதவும்.
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய காரணங்கள்:-
**மோசமான உணவுப்பழக்கம்
**ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறை
**மன அழுத்தம்
**ஹார்மோன் சமநிலையின்மை
**மது அருந்தும் பழக்கம்
**புகைப்பழக்கம்
**உடல் பருமன்
விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் பானங்கள்:
தேவையான பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)முருங்கை பூ – இரண்டு தேக்கரண்டி
3)ஜாதிக்காய் தூள் – அரை தேக்கரண்டி
4)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் இரண்டு தேக்கரண்டி முருங்கை பூவை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அரை தேக்கரண்டி அளவு ஜாதிக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பால் கெட்டியாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
அதன் பின்னர் இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து பருக வேண்டும்.இப்படி பால் தயாரித்து குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆலமர விழுது – சிறிதளவு
2)ஆலமர இலை கொழுந்து – இரண்டு
4)ஆலம் பழம் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
ஆலமர விழுது,ஆலமர கொழுந்து மற்றும் ஆலமர பழத்தை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து அரைத்த விழுதை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை வடிகட்டி பருக வேண்டும்.தொடர்ந்து 48 நாட்கள் பருகி வந்தால் விந்தணுக்கள் அதிகரிக்கும்.