நமது குடலில் அதிகப்படியான கழிவுகள் தேங்கி இருந்தால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.குடல் கழிவுகளை ஆசனவாயில் வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)மாவிலை – இரண்டு
2)கொய்யா இலை – இரண்டு
3)நுணா இலை -இரண்டு
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
முதலில் மாவிலை இரண்டு பறித்துக் கொள்ளுங்கள்.அடுத்து இரண்டு கொய்யா இலை மற்றும் இரண்டு நுணா இலை பறித்துக் கொள்ளுங்கள்.மஞ்சணத்தி இலையை தான் நுணா இலை என்கின்றோம்.இந்த நுணா இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடையில் நுணா இலை பொடியை வாங்கிக் கொள்ளவும்.
இந்த இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்துக் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பின்னர் அரைத்த பொடி கால் தேக்கரண்டி அளவு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் உள்ள கழிவுகள் மலத்தில் வந்துவிடும்.
குடல் கழிவுகளை வெளியேத் தள்ளும் மற்றொரு பானம்:
தேவையான பொருட்கள்:-
1)நிலாவரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
நாட்டு மருந்து கடையில் நிலாவரை பொடி கிடைக்கும்.இந்த பொடியை வாங்கி ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது கலந்து காலை நேரத்தில் பருக வேண்டும்.இப்படி செய்தால் குடல் கழிவுகள் முற்றிலும் வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)விளக்கெண்ணெய் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி விளக்கெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் பருகினால் குடல் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் கல் உப்பு கலந்து பருகினாலும் குடல் கழிவுகள் முழுமையாக வெளியே வந்துவிடும்.