கண்புரை பாதிப்பை குணமாக்க.. ஒரு சொட்டு தேன் போதும்! இதற்கு ஈடான மருந்து வேறில்லை!
உடலில் கண் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்பாகும்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கண் தொடர்பான பாதிப்புகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.கண்களில் எரிச்சல்,கண் நரம்பு பாதித்தல்,கண் பார்வை குறைபாடு,கண் வீக்கம்,கண் கட்டி,கண்புரை போன்ற பாதிப்புளால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.
இதில் கண்புரை ஒரு முக்கிய பாதிப்பாக உள்ளது.கண் கருவிழியை மூடும் அளவிற்கு அதன் மேல் சதை வளர்வதை தான் கண்புரை என்கிறோம்.கண்புரையில் புறத்துபுரை,மையப்புரை,முதிர்ந்தபுரை என்று பல வகைகள் இருக்கிறது.இதில் எந்த வகை கண்புரை பாதிப்பு ஏற்பட்டாலும் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.
தீர்வு 01:-
*கொத்தமல்லி விதை
*அன்னாசி மொக்கு
*நாட்டு சர்க்கரை
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி இடித்த கொத்தமல்லி விதை மற்றும் ஒரு அன்னாசி மொக்கை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்து வந்தால் கண்புரை பாதிப்பு குணமாகும்.
தீர்வு 02:-
*பாதாம் பருப்பு பொடி
*பால்
ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி பாதாம் பருப்பு பொடி சேர்த்து கலக்கி குடித்து வந்தால் கண்புரை பாதிப்பு குணமாகும்.
தீர்வு 03:-
*மிளகு
*பாதாம் பொடி
*தேன்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 மிளகை தட்டி போடவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி பாதாம் பொடி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் கண்புரை பாதிப்பு குணமாகும்.
தீர்வு 04:-
*கேரட்
ஒரு முழு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் கண்புரை பாதிப்பு முழுமையாக குணமாகும்.