சேலத்தில் மின் இணைப்புக்காக, கண்களில் கருப்புத் துணியை கட்டிபோராட்டம் நடத்திய குடும்பம்!!

Photo of author

By Savitha

சேலத்தில் மின் இணைப்புக்காக கண்களில் கருப்புத் துணியை கட்டி போராட்டம்!!

சேலத்தில் மின் இணைப்புக்காக மூன்று ஆண்டுகளாக போராடுவதாக கூறி,கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு வந்து போராட்டம் நடத்திய குடும்பம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.

சேலம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மனு அளிக்க காவல்துறையினர் ஒருவருக்கு மட்டும் அனுமதித்தினர்.

இதனிடையே காவல்துறையினர் நடத்தி விசாரணையில்,
கடந்த 2021ஆம் ஆண்டு மின்இணைப்பு கேட்டு 17ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய உள்ளதாகவும், இதுவரை மின்இணைப்பு வழங்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்த நிலையில், மின்இணைப்பு வழங்குவதற்காக அதிகாரிகள் வந்தால்,மணி என்பவர் மின் இணைப்பு வழங்க கூடாது என தடுப்பதாக குற்றம்சாட்டினர்.

இதனால் மின் இணைப்பு இல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக சிரமப்படுவதாகவும், குழந்தைகள் படிக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.