ரசிகர்களுக்கு வேலை வாங்கி தரும் பிரபல நடிகர்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 

0
105
A famous actor who gets jobs for his fans!! Happy fans!!
A famous actor who gets jobs for his fans!! Happy fans!!

ரசிகர்களுக்கு வேலை வாங்கி தரும் பிரபல நடிகர்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

சிவகர்த்திகேயன் தமிழ் சிமினா பட நடிகராக உள்ளார்.  இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார்.

தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற புதிய படம் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள்.  இந்த படம் ஜூலை14 ஆம் தேதியில் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதனை  தொடர்ந்து இவர் கமல் தயாரிக்கும் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் இவர் எனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதைகளுடன் புதிய இயக்குனர்கள் அதிகம் வருவதால் அவர்களின் படங்களில் நடிக்கிறேன் என்று கூறினார்.

மேலும் தற்போது பெரிய இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அதனையடுத்து நான் இந்தி படத்தில் நடிக்க போகிறேன் என்ற செய்தி உண்மை இல்லை என்றும்,  நமக்கான சம்பளத்தை வாங்கிக் கொண்டு தயாரிப்பாளரின் பிரச்சனையை கண்டு கொள்ளமால் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு படத்தில் ஏற்படும்  லாப நஷ்டத்தில் எனக்கும் பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஒருங்கிணைத்து ரசிகர் மன்ற உறுபினர்களின் எதிர்காலம் வழமாவும் நலமாவும் இருக்க  ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவேன் என்றும் தெரிவித்தார். இந்த அமைப்பின் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவுள்ளதாக தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Previous articleரசிகர்கள் எதிர்பார்த்த வேட்டையாடு விளையாடு பாகம் 2!! படத்தின் பணிகள் தொடக்கம்!!
Next articleமீண்டும் இணையும் தளபதி-சங்கர் கூட்டணி! தரமான அரசியல் படம் உருவாக வாய்ப்பு!!