மது பாட்டிலுடன் நடு ரோட்டில் அலப்பறை செய்யும் பிரபல நடிகை!! திட்டி தீர்க்கும் இணையவாசிகள்!!

0
31
A famous actress who is walking in the middle of the road with a bottle of wine!! Swearing netizens!!
A famous actress who is walking in the middle of the road with a bottle of wine!! Swearing netizens!!

மது பாட்டிலுடன் நடு ரோட்டில் அலப்பறை செய்யும் பிரபல நடிகை!! திட்டி தீர்க்கும் இணையவாசிகள்!!

தமிழ் திரையுலகில் வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமான ஒரு பிரபல நடிகை தான் சம்யுக்தா ஹெக்டே ஆவார்.

இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வெற்றி வாகை சூடிய படம் தான் கோமாளி. இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கினார். இந்த படத்திற்கு பிறகே இவருக்கு மவுசு அதிகரித்தது.

இதனைத்தொடர்ந்து மன்மத லீலை, தேள், பப்பி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது, தெலுங்கு படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, அவருடைய இருபத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்தநாளை அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

இந்த நிலையில், சம்யுக்தா ஹெக்டே தனது பிறந்தநாளுக்கு நண்பர்கள் அனைவரையும் ஓட்டலுக்கு கூட்டிச் சென்று பார்ட்டி கொடுத்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் அவர் கையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு நடு ரோட்டில் நாயுடன் இருப்பது போல் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், இந்த புகைப்படங்களுக்கு இணையவாசிகள் பலர் இவரை திட்டியும் வருகின்றனர். மேலும், கோமாளி பட ஹீரோயினா என்று இவரை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டும் வருகின்றனர்.

author avatar
CineDesk