தல அஜித் பதிலுக்கு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! அப்படி என்ன கேள்வியாய் இருக்கும்?

0
205

தல அஜித் திரைப்படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் காத்திருப்பார்கள் என்பது தெரிந்த ஒன்று. 

அஜித் நடித்த பில்லா 1 & 2 திரைப்படம்  நல்ல வசூலையும் மக்களிடம் நல்ல  வரவேற்பையும் பாராட்டையும்  பெற்றுள்ளது. பில்லா திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்திற்கு வேறு எந்த  திரைப்படமும் பகுதி-2 எடுக்கப்படவில்லை.

தற்போது அஜித்தின் பல படங்கள் மெகா ஹிட் படங்களாகவும் நல்ல வசூலையும் தந்துள்ளது. பிரபல இயக்குனர் சமீபத்தில் தனது நண்பரிடம், தல அஜித் ஓகே சொன்னால் நான் இந்த திரைப்படத்திற்கு பகுதி-2 எடுக்க தயார் என்று கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா 2 திரைப்படத்தை எடுக்க நான் தயாராக உள்ளேன் தல அஜித் ஓகே சொன்னால் மறுநாளே ஷூட்டிங் வைக்க ஏற்பாடு செய்வேன் என்று தனது நண்பர் சுப்பு பஞ்சு அவர்களிடம் கூறியிருக்கிறார்.

மங்காத்தா 1 திரைப்படம்  மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வெங்கட் பிரபு கூறிய செய்தியைக் கேட்ட தல அஜித் ரசிகர்கள் மங்காத்தா  2 திரைப்படத்திற்கு மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

பொதுவாகவே தல அஜித்தின் திரைப்படங்களை மக்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து மகிழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleபிக்பாஸ் சீசன்4 கன்டஸ்டன்ட்ஸ்  லிஸ்ட் ரெடி! கவர்ச்சிப்புயல்களின் ஆதிக்கம்! வேற லெவலுக்கு டிஆர்பி ரேட்டிங் எக்குற போவது நிச்சயம்!
Next articleவேலை! தேர்வு இல்லை! தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here