ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நடந்து முடிந்தது. மெகா ஏலமானது சவூதி அரேபியாவில் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் பல நடைபெற்றது. அனைத்து அணிகளும் தங்கள் வீரர் பட்டியலை சீரமைத்தனர்.
இந்நிலையில் அஷ்வின் உடன் விடியோ ஒன்றில் உரையாடிய பிரசன்னா எந்த அணி யாரை வாங்க திட்டமிட்டது என்பது குறித்து பேசினார். அதில் KKR அணியின் முக்கிய வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸலை ஒரு பிரபல அணி வாங்க முயற்சி செய்தது அவர்கள் ரஸ்ஸல் இடம் KKR அணியை விட்டு வெளியே வந்தால் உங்களை அதிக தொகையில் வாங்குவதாக கேட்டனர்.
ஆனால் அவர் நான் எப்போதும் கே கே ஆர் அணியை சேர்ந்தவன் தான் எனக்கு பணம் முக்கியமில்லை KKR அணி தான் முக்கியம் எனவும் கூறினார். கடந்த ஆண்டு கோப்பை வாங்கி தந்த ஸ்ரேயர்ஸ் ஐயரை விடுவித்து ரஸ்ஸலை 12 கோடிக்கு தக்க வைத்தது KKR அணி நிர்வாகம். மேலும் அவர் 2014 முதல் KKR அணியில் விளையாடி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இவரை எல்லா முறையும் தக்கவைக்கிறது KKR அணி. இவர் பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் பந்து வீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அதற்காகவே அவரை அணி நிர்வாகம் தக்க வைத்து வருகிறது.