ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!!

Sakthi

ஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் தனக்கு நடந்த கத்தி குத்து பற்றி புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் 1988ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது.

இதற்கு மத்தியில் கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்கள் பங்கேற்றார். அப்போது வாலிபர் ஒருவர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அவர்களை கத்தியார் சரமாரியாக குத்தினார். இந்த கத்தி குத்து தாக்குதலில் சல்மான் ருஷ்டி அவர்கள் ஒரு கண் பார்வையை இழந்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக கடந்த மே 20ம் தேதி நியூயார்க்கித் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதையடுத்து தனக்கு நடந்த கத்தி குத்து சம்பவத்தை பற்றி புத்தகம் எழுதவுள்ளதாக சல்மான் ருஷ்டி அவர்கள் கூறியுள்ளார்.

இது பற்றி சல்மான் ருஷ்டி அவர்கள் “என் மீது நடந்த தாக்குதல், என்ன நடந்தது, அதன் அர்த்தம் என்ன, அதை சுற்றி நடந்தது என்ன என்பதை பற்றி ஒரு புத்தகமாக எழுத முயற்சித்து கொண்டிருக்கிறேன். இது ஒரு சிறிய புத்தகமாக இருந்தாலும் உலகில் இது எழுதுவதற்கு எளிதான புத்தகம் அல்ல. ஆனால் வேறு விஷயத்தை செய்ய இதை கடந்து செல்ல வேண்டியுள்ளது” என்று அவர் கூறினார்.