அஜித்திற்கு 6 அடியில் சிலை வைத்த ரசிகர்…விஜய் ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

Photo of author

By Savitha

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்திற்கு எந்தளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்ல வேண்டிய தேவையில்லை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை ரசிகர்கள் தலையில் கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான் ஆனால் அஜித் ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று தனது ஹீரோக்கு சிலை வைத்திருக்கிறார். இதுவரை ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுவது, சிலை வைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சில வடிவமைத்திருந்தார்.AJITH FANS CLUB DINDIGUL (@ONLINE_DAFC) / Twitter

இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் அஜித்திற்கு சிலை வைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது மற்றும் இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உணவகம் நடத்தி வரும் அஜித் ரசிகர் ஒருவர் தான் இந்த செயலை செய்துள்ளார், சுமார் 6 அடி உயரத்தில் துணிவு பட கெட்டப்பில் நடிகர் அஜித்தின் சிலையை வடிவமைத்து இருக்கிறார். வழக்கம்போல இணையத்தில் சிலர் இந்த செயலுக்கு பாராட்டை தெரிவித்தும், சிலர் இதனை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

தற்போது நடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார், இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியார், அமீர், பாவ்னி, சிபி சந்திரன் மற்றும் மமதி சாரி போன்ற பலர் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா எனும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.