ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! எதற்கும் துணிந்தவன் படத்தின் பொங்கல் பரிசு!!

Photo of author

By Parthipan K

ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! எதற்கும் துணிந்தவன் படத்தின் பொங்கல் பரிசு!!

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, சுப்பு பஞ்சு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து பொங்கலையொட்டி, எதற்கும் துணிந்தவன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய போஸ்டர் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல் நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடல் ‘வாடா தம்பி’ சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலாக ‘உள்ளம் உருகுதய்யா’ என்னும் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மூன்றாவது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் மூன்றாவது பாடலாக தற்போது வெளியாக இருக்கும் ‘சும்மா சுர்ருன்னு’ என தொடங்கும் இந்தப் பாடல் வரிகளை, சிவகார்த்திகேயன் எழுதி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே, சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் இந்த பாடலின் வருகைக்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து கொண்டிருக்கிறார்கள்.