TVK: தவெக கட்சி கொடியை ஏற்றிய மறுநாளே இறக்கிய விழுப்புரம் மகளிரணி தலைவி.
விசிக வை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கு மற்று கட்சியான திமுக தான் முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் பழூர் பகுதியின் மகளிரணி தலைவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த தொகுதியில் தவெக கொடியை ஏற்றினார். பின்பு அடுத்த நாளே அந்த கொடியை இறக்கவும் செய்தார்.
இது குறித்து அந்த பெண்மணியிடம் கேட்ட பொழுது, இங்குள்ள நிர்வாகிகள் பெண்களுக்கு மதிப்பு கொடுபதில்லை. தாங்கள் தான் அதிகளவு வேலைகளை செய்வதாக கூறுகின்றனர். இதனால் தான் நான் ஏற்றிய கொடியை இறக்கினேன் எனத் தெரிவித்தார். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் ஆராயிந்து பார்த்ததில், அந்த பெண்மணியின் சகோதரன் ஆளும் கட்சியான திமுக-வில் இருந்துள்ளான். அதனால் தான் இவர் கட்சிக்கு பங்கம் விளைவிக்க வேண்டி இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
இது முற்றிலும் மாற்றுக் கட்சியினரின் சதி தான் எனத் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு விஜய் கட்சியைத் தொடங்கி தனது எதிரியை அறிவித்தது முதல் பலவற்றில் திமுக அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் உச்சகட்டமாக தனது கூட்டணி கட்சி நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் கூட திருமாவை கலந்துக் கொள்ள விடாமல் அழுத்தம் கொடுத்தனர். இவ்வாறு முற்றிலும் அவரை ஒதுக்கி கட்ட வேண்டும் என்பதில் திமுக மும்முரம் காட்டி திட்டம் தீட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.