Yemen: ஏமன் நாட்டில் கேரளாவை சேர்ந்த பெண் செவிலியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவில் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வடகிழக்கு இஸ்லாமிய நாடுகளுக்கு அதிக அளவில் வேலைக்கு செல்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா வேலைக்கு சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் செவிலியர் நிமிஷா பிரியா ஒருவரை கொன்றதாக கைது செய்து சிறையில் ஏமன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக ஏமன் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் நிமிஷா பிரியாவின் தாயார். ஆனால், அவரது மனுவை நிராகரிப்பு செய்து இருந்து எமன் நீதி மன்றம். அன் நாட்டின் சட்ட திட்டப்படி கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
அந்த வகையில் ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி அந்த நாட்டின் சிறையில் இருக்கும் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு அடுத்த மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்து இருக்கிறார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கூறுகையில் ஏமன் நாட்டில் சட்டவிரோதமாக கிளினிக் வைக்க தனக்கு உதவிய மஹ்தி என்பவர் உதவி செய்ததாகவும்.
பிறகு அவர் தன்னை ஏமாற்றி தனது பாஸ்போர்ட்டை திருடி இருக்கிறார். அந்த பாஸ்போர்ட்டை அவரிடம் இருந்து பெற மயக்க மருந்து மஹ்திக்கு கொடுத்து அதில் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்து இருக்கிறார். என்று மயக்க மருந்து கொடுக்க தாக்கும் யோசனை கொடுத்தது அருகில் உள்ள சிறைச்சாலையில் பணிபுரியும் ஜெயிலர் எனக் கூறி இருக்கிறார்.
ஏமன் நாட்டு சட்டப்படி மரண தண்டனைக்கு பதிலாக பணம் கொடுத்து விடுபடலாம் எனவே நிமிஷா பிரியாவின் தாயார் (57) பிரேமா குமாரி தன் மகளை மீட்க தனியாளாக ஏமன் நாட்டிற்கு சென்று இருக்கிறார்.