பாரதியார் பல்கலைக்கழத்தில் தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம்! தவிப்பில் மாணவர்கள்!

0
155
A few days before the exam, there is a change in the syllabus! Students in distress!
A few days before the exam, there is a change in the syllabus! Students in distress!

பாரதியார் பல்கலைக்கழத்தில் தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம்! தவிப்பில் மாணவர்கள்!

கோவை பாரதியார் பல்கலைக்கழத்தின் கீழ் ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி மாவட்டங்களில் 133கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகளில் பயிலும் பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு எம்எஸ்  ஆபிஸ் என்ற பாடம் தான் இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பல்கலைக்கழகம் சார்பில் அதன் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த சுற்றறிக்கையில் பிகாம் முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து எம்எஸ் ஆபிஸ் பாடம் நீக்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் அண்ட் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா போன்ற பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளநிலை மாணவர்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வுகள் துவங்கப்படுகிறது.இந்நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.தற்போது சேர்க்கப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காளிராஜ் என்பவர் வெளியிட்ட புத்தகங்கள் ஆகும்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இவருடைய பணி காலம் முடிவடைந்தது.அவர் பதவியில் இருக்கும் பொழுதே அவருடைய  புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த பாடத்திடங்ககளுக்கும் மாணவர்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை என பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

தேர்விற்கு 20நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திடீரென புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினால் அதனை மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்வார்கள் நாங்கள் எப்படி கற்று கொடுப்பது என பேராசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் பிகாம் சிஏ மாணவர்களுக்கு எம்எஸ் ஆபீஸ் பாடம் மிக முக்கியமானதாகும்.இதனை மாற்றி இருப்பது தவறு இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் இது மாணவர்களின் தேர்வை பாதிக்கும் எனவும் பேராசிரியர் புத்தங்களை விற்பனையை அதிகரிக்க இதுபோன்ற செயல் முறைகேடானது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார் .

Previous articleமாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த குறிப்பிட்ட தேதிகளில் சதுரகிரி கோவிலில் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை!
Next articleமாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த மாவட்டத்தில் இந்த ஒரு கல்லூரிக்கு மட்டும் விடுமுறை!