18 ஆண்டுகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்!! முன்னணி நடிகர்கள்  ரிஜெக்ட் செய்த கதை!!  

0
32
A film that has made an impact even after 18 years!! The story of rejection by leading actors!!
A film that has made an impact even after 18 years!! The story of rejection by leading actors!!

18 ஆண்டுகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்!! முன்னணி நடிகர்கள்  ரிஜெக்ட் செய்த கதை!!

சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர் முதலில்  1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனையடுத்து  ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க சில ஹீரோக்கள்  கதை பிடிக்காத காரணத்தால் ரிஜெக்ட் செய்து விட்டார்கள். அடுத்ததாக முருகதாஸ் சூர்யாவிடம் சென்று கதை சொல்லியுள்ளார்.

சூர்யா முழு கதையையும் கேட்டு படத்திற்கு ஒகே சொன்னார். அதன் பின் அந்த படத்திற்கு காஜினி என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும் இந்த படம் 7 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு  50 கோடி வசூல் செய்தது.

இந்த படத்தின் வெற்றி பாலிவுட் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் கஜினி படம் இந்தியில் எடுக்கப்பட்டது. அந்த ரீமேக்கில் ஹீரோவாக அமீர்கான் நடித்திருந்தார். மேலும் இந்த படம் பாலிவுட் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தற்போது அவர் கமலுடன் இணைத்து விகாரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். அந்த அசத்தலான நடிப்பினால் அனைவராலும் பாராட்டு பெற்றார்.

கஜினி படத்திற்கு முதலில் அஜித் இடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அவர் விலகிய பின்னர் விக்ரம், சிம்பு போன்ற நடிகர்கள் கதையை ரிஜெக்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jeevitha