உண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்! 

0
302
#image_title

உண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்! 

நண்பன் படத்தில் வீடியோ கால் மூலம் டாக்டரின் அறிவுரை பேரில் பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்று இருக்கும். அதே போல் ஒரு சம்பவம் நடந்து அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த சம்பவம் நாட்டின் மிக குளிர்ச்சியான பனிப்பொழிவு மாநிலமான காஷ்மீரில் நடைபெற்று உள்ளது.

காஷ்மீரில்  உள்ள குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி மிகுந்த பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இங்கு யாரும் சென்று வர முடியாத ஒரு மோசமான சூழல் நிலவுகிறது. 

இந்த சூழ்நிலையில் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏகப்பட்ட உடல்நல பிரச்சனைகள் இருந்ததால் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது. எனவே சற்று வசதிகள் மேம்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவானது.

இதனால் கிரால்போராவில் உள்ள மாவட்ட துணை மருத்துவனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமோ அங்கு செல்ல முடியாத நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் தத்தளித்தனர்.

செய்வதறியாத சூழலில் திகைத்து நின்ற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், இது குறித்து கிரால்போரா ஆஸ்பத்திரி மகப்பேறு டாக்டர் பர்வைசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் வாட்ஸ்அப் ‘வீடியோ கால்’ மூலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அர்சாத் சோபிக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். அதன்மூலம் டாக்டர் அர்சாத் சோபியும் செயல்பட, கர்ப்பிணிக்கு சுகபிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  

வீடியோ கால் மூலமாகவே ஒரு பிரசவத்தை சிறப்பான முறையில் செய்து முடித்து தாய் சேய் உயிர்களை காப்பாற்றிய டாக்டர் பர்வைஸின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Previous articleமாசி மாத சிறப்பு பூஜை! முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!
Next articleதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு!