10 பேர் கொண்ட கும்பல் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளையடித்தனர்!!

0
82
A gang of 10 members robbed a jewelery lending company of 30 kg of gold!!
A gang of 10 members robbed a jewelery lending company of 30 kg of gold!!

ஒடிசா மாநிலம்: சம்பல்பூர் மாவட்டத்தில் புத்தராஜா என்ற பகுதியில் அமைந்துள்ளது தனியார்க்கு சொந்தமான தங்க நகைகடன் வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனம் வழக்கம்போல நேற்று காலை 10 மணிக்கு ஊழியர்கள் மூலம் திறக்கப்பட்டது. நிறுவனம் திறந்து சில நிமிடங்களில் அந்த நிறுவனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.

மேலும் அவர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பணியாளர்கள் என அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை கயிறு மூலம் கட்டிபோட்டுள்ளனர்.  மேலும் இந்த சம்பவத்தில் இந்த நிறுவனத்தில் இருந்த 30 கிலோ தங்கம் மற்றும் 4 லட்சம் பணம் என அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டது. ந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்நிறுவன ஊழியர்கள் போலீசில் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நகைக்கடன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் துப்பாக்கியை கொண்டு கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleசாதாரண ஆட்டம்  இல்ல.. ரிஷப் பண்ட் செய்த சம்பவம்!! புகழ்ந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!!
Next articleஇந்திய அணியின் பெரிய பிரச்சனை இதுதான்.. இந்த முறையும் ஏமாற்றம்!! வாய்ப்பை தவறவிட்ட வீரர்கள்!!