தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… 

Photo of author

By Parthipan K

தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… 

Parthipan K

A gang of robbers showed their hands in the Tahsildar's house!..Is this the same in the officer's house?...

தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?…

நாங்குநேரி அருகேவுள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தான்  செல்லையா இவருடைய வயது 62. இவரது மனைவி சாந்தகுமாரி வயது 56. செல்லையா சில மாதங்களுக்கு முன்பு தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

அவருடைய மனைவி சாந்தகுமாரி மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருகிறார்.இவருக்கு நாங்குநேரி அருகேவுள்ள தென்னிமலையில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு ஒன்று  இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் பண்ணை வீட்டுக்கு சென்றார்.

பின் செல்லையா அன்று இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் அங்கேயே தங்கிவிட்டார்.பின்னர் நேற்று தோட்டத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிவுள்ளார்கள்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது.அதிர்ச்சி அடைந்த அனைவரும் உடனே உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது பீரோவிலிருந்த ரூ. 5 லட்ச பணமும் மேலும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான எல். இ. டி. டிவி உள்ளிட்ட பல பொருட்களும் திருடு போயிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தகுமாரி நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால்  அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.