பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி; இரக்கமின்றி செய்த சம்பவத்தால் மாணவி பலி

Photo of author

By Parthipan K

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி; இரக்கமின்றி செய்த சம்பவத்தால் மாணவி பலி

Parthipan K

கொரோனா அச்சம் காரணமாக பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி பரிதாபமாக பலி அடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹன்சிகா என்பவர்.அந்த மாணவி மற்றும் அவரது குடும்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரை விட்டு டில்லிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஹன்சிகாவும் அவரது தாயாரும் சொந்த ஊருக்கு செல்ல நொய்டாவில் இருந்து உ.பி அரசு பேருந்தில் பயணம் செய்தனர்.

பயணத்தில் உடல் நிலை சரி இல்லாத ஹன்சிகாவை சக பயணிகள் பார்த்து விட்டு இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகப்பட்டனர்.அதன் பிறகு இந்த செய்தி அந்த பேருந்து நடத்துநருக்கு தெரியவந்தது.இதனை அடுத்து அந்த நடத்துநரும்,ஓட்டுநரும் கொரோனா தொற்று உள்ளதா என்று கூட கேட்காமல் அன்சிகாவை ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசி உள்ளனர்.தூக்கி வீசப்பட்டதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் அந்த பெண்ணின் தாய் தன் மகளுக்கு கொரோனா இல்லை என்று அழுது கதரியும் அந்த ஓட்டுநரும், நடத்துநரும் அந்த மாணவியின் உயிரை இரக்கமின்றி பறிதுவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகிறது ஆனால் இப்பொழுது தான் தெரிய வருவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள பெண்கள் ஆணையம் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உ.பி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.