cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் விராட் கோலி ரோஹித் மற்றும் கம்பீருடன் மோதலில் உள்ளார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீருடன் விராட் கோலி மோதலில் உள்ளார். அதனால் தான் அவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரண்டன் ஜூனியர் கூறியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் படு தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பார்க்கப்பட்டனர். மேலும் இவர்களை விமர்சித்து பல கடுமையான கருத்துக்கள் வெளியானது. இதில் விராட் மற்றும் ரோஹித் இருவரும் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளனர்.
இதனால் இந்திய அணி இதுவரை இல்லாத ஒயிட் வாஷ் தோல்வி அடைந்தது. இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து உடன் தோல்வியடைந்ததால் இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராண்டன் ஜூனியர் விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ரோஹித் மற்றும் கம்பீருடன் விராட் கோலி மோதலில் உள்ளார். அதனால் தான் அவர் சரியாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன்.
மேலும் அவர் சுழற்பந்து க்கு எதிராக தடுமாறுகிறார். இப்படியே தொடர்ந்தால் ஆஸ்திரேலியா போட்டி 4 நாட்களில் முடிந்து விடும் என்றும், நேத்தன் லயன் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவருக்கு எதிராக விளையாடுவது கடினம் என்றும் கூறியுள்ளார்.