10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு..
தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை.பத்தாம் வகுப்பு தமிழ் பொது தேர்வில் தமிழ் பாடத்தை எழுதிய அஞ்சு புள்ளி 16 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் மறுகூட்டலுக்கு பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று மதியம் 2 மணி அளவில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் விவரங்களை பதிவிட்டு மறுகூட்டல் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மறுகூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழும் அன்றைய தினம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டுள்ளது.