மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!
கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால் முற்பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவத் தொடங்கி விட்டது.
தமிழகத்தில் பல கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சேலம்,வேலூர்,திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் சொல்லவே வேண்டியது இல்லை.
ஆனால் தற்பொழுது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.தென் இந்தியப்பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில் வீசும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களான சிவகங்கை,ராமநாதபுரம்,திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.