தமிழக அரசின் அதிரடியான முடிவு ;
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கமாக சிறந்து விளங்க ஆசிரியர்களால் தான் முடியும் எனவே மாணவர்களுக்கென இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் நன்கு சிறந்து விளங்கவும் மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களை வழிநடத்தவும் சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே முடியும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் பலவகையான பாடங்களுக்கு காலிப்பணியிடங்கள் இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் நலன் :
ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நோக்கங்கள் அனைத்தையும் செயல்படுத்தி கொண்டு இருக்கிறது, ஆசிரியர்களுக்கான அடிப்படையான வசதிகள் மற்றும் அவர்களின் சொந்த ஊர்களில் பணியிடத்தை மாற்றித் தருமாறு கேட்டுள்ளனர் எனவே ஆசிரியர்கள் நலன் மற்றும் அவர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றித்தர வழி வகை செய்து கொண்டு வருகிறது என்று தகவல் வெளியிட்டுள்ளது, ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி அனைவரையும், தமிழக அரசின் சார்பாக கொளரவிக்கப்படுகிறது.
சென்னையில்:
வருகின்ற பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று மதுராவாயிற்கு அருகே உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது, இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளியில் தற்காலிக பணியிடங்களில் வேலை புரியும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம், மற்றும் அனைத்து வகையான பாடப் பிரிவுகளில் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம், அதேபோல் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கும் அனைத்து வகையான போட்டி தேர்வு பயிற்சியாளர்களுக்கு, காலிப் பணியிடங்கள் உள்ளது எனவே இவர்களும் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது .