இல்லத்தரசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!எண்ணெயின் விலையை குறைக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை இந்தியாவில் இறக்குமதி செய்து வருகிறது.கடந்த சர்வதேச சந்தையின் விலை அதிகரித்து வந்ததால் இந்தியாவின் சிறு வியாபார விடைகளும் சற்று அதிகமாகவே உயர்ந்துள்ளது. மேலும் சமீப காலமாக சர்வதேச சந்தையின் விலை குறைந்து வருகிறது.
இந்தியாவின் கடந்த மாதம் ரூ,பத்து முதல் 15 வரை விலை குறைக்கப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்து சர்வதேச விலை குறைந்திருப்பதனால், இதைப் பற்றி ஆலோசனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதன்பிறகு உணவு செயலாளர் சுதன்சு பாண்டே மற்றும் அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், பெரும் உற்பத்தியாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டினார்.
கூட்டத்தில் அவர் பேசியவற்றை பின்வருமாறு காணலாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்வதேச சந்தையின் சமையல் எண்ணெயின் விலை 10% குறைந்து இருப்பதனால் அந்த செய்தியை வாடிக்கையாளருக்கு பகிருமாறு வலியுறுத்தினோம். விற்பனை செய்யும் உற்பத்தியாளர்களை ரூபாய் பத்தாக குறைக்குமாறு கூறியிருந்தோம்.
அதற்குப் பதிலளித்த பெரும் உற்பத்தியாளர்கள் அடுத்த வாரத்திற்குள் பாமாயில், சோயா பீன்ஸ், சன்ஃபிளவர் போன்ற வகையான பொருட்களை இறக்குமதி செய்யப்பட்ட பின் அவற்றின் விலைகளை ரூ.10 குறைப்பதாக கூட்டத்தில் உறுதியளித்தனர். பின்னர் இந்த எண்ணெய்களின் விலை குறைந்ததால் சமையல் எண்ணெய் விளையும் சற்று குறைந்து விற்கப்படும்.
ஒரே நிறுவனத்தின் சமையல் எண்ணெய் விலை வெவ்வேறு இடங்களுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை அவற்றின் விலைகள் வேறுபாடுடன் இருக்கிறது. எனவே இதுபோலுள்ள நிறுவனங்கள் அதற்கேற்றாப்போல் விலையை விற்கின்றனர். இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயித்து நிற்குமாறு கூறியிருந்தோம்.
இக்கூட்டத்தில் கூரியிருந்தாற்போல் அவற்றை விலைகளை விரைவில் அமல்படுத்துமாறு அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.