சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி!! இனி நெரிசல் சிக்க தேவையில்லை சீக்கிரமாக போகலாம்!!
சென்னை என்றாலே அனைவரும் அறிந்தது எப்போதுமே பிஸியாக இருக்கும் மக்கள் தான். தினமும் அனைத்து இடங்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும்.
தினம் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்வோர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதால் இதைப் பூர்த்தி செய்யும் விதமாக பொது போக்குவரத்துக்காக மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.
இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதன் காரணமாக தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் நடந்து வருகிறது. சென்னை சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் டிநகர் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் சாலையை கடப்பதே மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே இதைத் தடுப்பதற்காக புதியதாய் கட்டப்பட்ட நகரும், படிக்கட்டு வசதியோடு அமைந்துள்ள நவீன சுரங்க நடைபாதை சென்னை சென்ட்ரல் அருகே அமைக்கப்பட்டிருக்கிறது.
இது கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் மக்கள் விரைவாக செல்வதற்கு ஏதுவாக இருக்குமாறு நுழைவு வாயிலில் இருபுறமும் நகரும் படிக்கட்டு மற்றும் கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சுரங்க பாதையின் வழியாக சாலையை கடக்காமல் நேரடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லலாம். இதற்கான கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்து சுவர்களில் இயற்கை சம்மந்தமான ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
விரைவில் இதன் வேலைகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.