அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக் வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Parthipan K

அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக்  வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

கூவத்துார் கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது அப்போது அதே பகுதியில் எதிரே வந்த டாடா மேஜிக்  வாகனம்மானது பேருந்து மீது உரசியது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த டாடா மேஜிக் வாகனம், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

அந்த விபத்தில்  வாகனத்தில் சென்ற 8 பேர் காயமடைந்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து கூவத்துார் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்குவந்த போலீசார் , வழக்குப்பதிவு செய்தனர் மேலும்  காயம் அடைந்த 8 பேரையும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்