பரபரப்பு செய்தி:! விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!!

Photo of author

By Parthipan K

பரபரப்பு செய்தி:! விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!!

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் அருகே ஆலக்கிராமம் பகுதியில் அரசு பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இப்பேருந்து காலை 10 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டது. இது ஆலக்கிராமம் பகுதியில் சுமார் 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த போது சாலை ஓர பள்ளத்தில் எதிர்ப்பாராத விதமாக கவிழ்ந்து. இதில் 30 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கும் திண்டிவனம் அரசு மருத்துவமனையிக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. விபத்தில் காயமடைந்தவர்களை 5 மேற்பட்ட ஆம்புலன்ஸில் மருத்துவமனையிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.