அதிக வேலை பளு!! அரசு போக்குவரத்து கழக ஊழியர் பணி முடித்து செல்லும்போது திடீர் மரணம்!!

0
224
#image_title

நாகர்கோயில் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் பணி முடித்து செல்லும்போது திடீர் மரணம் போக்குவரத்து கழகம் நிர்வாகத்தால் அதிக வேலைப்பளு திணிப்பே மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கன்னியாகுமரி பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வந்தவர் இலங்கா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இன்ப சேகரன். இவர் நேற்று நாகர்கோயில் பனிமனையில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் சடலத்தை போலீசார் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகளால்,வழங்கப்பட்ட பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக இன்ப சேகரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தொழிலாளர்களுக்கு அதிக வேலைப்பளு வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டியும் இன்பசேகரின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த கேட்டும் போக்குவரத்து கழக ஊழியர்கள் நாகர்கோவிலில் போக்குவரத்த்து க் கழக கோட்ட அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து இன்பசேகரின் தந்தை இசக்கி முத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இரவு முழுவதும் பணியாற்றி விட்டு வீட்டில் சென்று ஓய்வெடுத்த தனது மகன் இன்பசேகரனை போக்குவரத்து கழக அதிகாரிகள் மீண்டும் அழைத்து நாகர்கோவிலுக்கு சென்று பணியாற்றுமாறு கூறியதால் பணிச்சுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் உயிரிழப்புக்கு அதுவே முக்கிய காரணம் எனவும் கூறினார்.

இது தொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் இன்பசேகரின் மனைவி புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், வருங்காலத்தில் போக்குவரத்து கழக நிர்வாகம் தொழிலாளர்கள் மீது வேலை பளு திணிப்பை கைவிட வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துவதாக கூறினார். சமீபகாலமாக போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வேலைப்பளு அதிகாரிகளால் அதிகளவில் திணிக்கப்படுவதாகவும்.

இதனால் மன உளைச்சலுக்கு ஊழியர்கள் ஆளாகியுள்ளதாகவும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதால் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Previous articleகன்னியாகுமரி – கேரளா செக்போஸ்டில் அமைச்சர் மனோதங்கராஜ் அதிரடி ஆய்வு! அலறிய கேரளா தமிழ்நாடு எல்லை!
Next articleரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்!!