அரசியலையே புரட்டிபோட பெரிய வாய்ப்பு.. விஜய் க்கு இது தான் லாஸ்ட் சான்ஸ்!! மாலை வரை தான் டைம்!!

0
255
A great opportunity to turn politics upside down.. This is the last John's for Vijay!! Only time till the evening!!
A great opportunity to turn politics upside down.. This is the last John's for Vijay!! Only time till the evening!!

அரசியலையே புரட்டிபோட பெரிய வாய்ப்பு.. விஜய் க்கு இது தான் லாஸ்ட் சான்ஸ்!! மாலை வரை தான் டைம்!!

விக்கிரவாண்டி தேர்தலானது நாளை மறுநாள் நடைபெறும் பட்சத்தில் இன்றுடன் பரப்புரை முடிவடைய உள்ளது. இதன் காரணமாக திமுக பாமக நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியானது நேரடியாகவே அதிமுகவிடம் ஆதரவு கேட்டது. அதேபோல பாமகவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் படங்களை வைத்து வாக்குகளை திரட்டினர்.

ஆனால் அதிமுக யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகித்தபடியே உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி விஜய்யின் ஆதரவு கிடைத்தால் இந்த தேர்தலை வென்றுவிடலாம் என்ற திட்டத்தில் இருந்தனர்.குறிப்பாக இவர்களது கூட்டணி சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனிடையே அதிமுகவின் வாக்கு வங்கியும் யாருக்கு செல்லும் என்பதில் பெரும் கேள்வியானது தற்பொழுது வரையுள்ளது.

குறிப்பாக அதிமுக வின் பெரும்பாலான வாக்குகள் பாமகவிற்கு செல்லும் என்று பலரும் கூறுகின்றனர்.அந்த வகையில் விஜய் அவர்கள் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் வாக்கு சதவீதத்தில் முன்னேறுவதுடன் அரசியலமைப்பிலும் முக்கிய இடத்தை பிடிக்கும். இந்த இடைத்தேர்தலில் முதல் வெற்றியை தவெக ஆதரவுடன் நாதக பிடித்து விட்டால் அதன் தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மைக் கட்சிகளை எதிர்க்க இது ஏதுவாக அமைந்துவிடும் என்று கூறுகின்றனர்.

இன்று மாலை-க்குள் பரப்புரை முடிவடைய உள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவிக்க குறைந்த நேரமே உள்ளது.அதேபோல அதிமுகவும் தங்களது ஆதரவை கடைசி நேரத்தில் பாமகவிற்கு கொடுக்கும் பட்சத்தில் பாஜக பாமக அதிமுக என்ற பழைய கூட்டணி திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.

Previous articleஉதயநிதி உரிமைத்தொகை குறித்து சொல்லும் புள்ளி விவரம் மிகவும் சரி.. இதெல்லாம் சாதனை பேச்சு – அன்புமணி ராமதாஸ்!!
Next articleஜாமீன் பெற கூகுள் லொகேஷன் ஷேர் செய்ய வேண்டுமா? உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பு