National

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

உத்தரபிரதேச மாநிலம் ஹதராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ஓயும் முன்பே, அடுத்தடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டி கொன்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

உத்தரபிரதேசம் ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் மகாதேவ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. இந்தக் கொடுமைகளை செய்த நபர்களான தர்ஷன் பாட்டியா, தேவ்கரன் காட்வி, மிலான் பாட்டியா ஆகியோரை கைது செய்துள்ளனர்.மேலும் நான்காவது குற்றவாளியான மொஹித் பாட்டியா தம்பி ஓடி தலைமறைவாகி இருப்பதால் ,தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு குஜராத் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஸ் மேவாணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல மஹிசாகர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக 35 வயது பெண் ஒருவரை இரண்டு நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதுகுறித்து விசாரித்த போது பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் எண்களை ரீச்சார்ஜ் சாவடியில் இருந்து குற்றவாளிகள் பெற்று அப்பெண்ணை அழைத்து கொடுமை செய்தது தெரியவந்தது.

Leave a Comment