ஜியோ பயனாளர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!!

0
126
A happy news for Jio users!! Jio's Crazy Recharge Plan!!
A happy news for Jio users!! Jio's Crazy Recharge Plan!!

ஜியோ பயனாளர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.

அதிக அளவில் பொதுமக்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில் அதன் உபயோகத்திற்காக  இன்டர்நெட் தேவைப்படுகின்றது.

அதனை வழங்குவதற்கே பல தனியார் நிறுவனங்கள் அமைப்பு செயல்படுகின்றது.அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ புதிய வசதி ஒன்றை தனது பயனாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ஜியோ சிம் பயனாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்துவருபவர்களுக்கு  அதன் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இந்த புதிய திட்டமானது ஜியோ பயனாளர்களுக்கு உதவும் வகையில் இனி ரூ.19 மற்றும் ரூ. 29  என்ற மதிப்பில் பூஸ்டர் பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பேக் ஜியோ பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தினசரி டேட்டாவை உபயோகித்து விட்டு மீண்டும் டேட்டா தேவைப்படும் பயனாளர்களுக்கு இது உதவும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் இனி ரூ.19 மற்றும் ரூ. 29  என்ற மதிப்பில் 1.5ஜிபி முதல்  2.5 ஜிபி வரை டேட்டா வழங்கப்படும்.

இந்த திட்டத்தை ஜியோ பயனாளர்கள் அனைவரும் உபயோகித்து பயன் பெறுமாறு  நிறுவனம் கேட்டு கொள்கின்றது. முதலில் ஜியோவில் 25 ரூபாயில் பூஸ்டர் திட்டம் செயல்பட்டு வருகின்ற நிலையில் இந்த புதிய திட்டத்தின் மூலம் இன்னும் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous article      உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!! 
Next articleமாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!