கனரக லாரி மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 17பேர் படுகாயம் சேலத்தில் பரபரப்பு!
சேலத்தில் இருந்து சங்ககிரி ,பவானி மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக கனரக லாரி வந்து கொண்டிருந்தது.அதே பகுதியில் எதிர்த்திசையில் அரசு பேருந்து ஓன்று வந்துகொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தானது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் ,நடத்துனர் உட்பட 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கா அனுமதித்தனர்.
மேலும் அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றதும் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.