மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

Photo of author

By Divya

மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

Divya

வெயில் காலத்தில் உடல் சூடு,மூலச்சூடு ஏற்படாமல் இருக்க இந்த மூலிகை தைலம் தயாரித்து பயன்படுத்துங்கள்.

மூலச்சூடு தைலம்

தேவையான பொருட்கள்:-

1)நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
2)எலுமிச்சை சாறு – 200 மில்லி
3)வெள்ளை வெங்காயச் சாறு – 200 மில்லி
4)குப்பைமேனி இலை சாறு – 200 மில்லி
5)அதிமதுரப் பொடி – 50 கிராம்
6)சீரகப் பொடி – 50 கிராம்

மூலச்சூட்டை தணிக்கும் மூலிகை தைலம் தயாரிக்கும் முறை:-

முதலில் அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் 500 மில்லி அதாவது அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் சிறிது சூடான பின்னர் ஐந்து அல்லது ஆறு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை நல்லெண்ணெயில் கலக்க வேண்டும்.அதன் பிறகு 5 வெள்ளை வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதையும் சூடாகி கொண்டிருக்கும் நல்லெண்ணெயில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் ஊற்ற வேண்டும்.இந்த நல்லெண்ணெய் கலவையை குறைவான தீயில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

500 மில்லி நல்லெண்ணெய் சுண்டி 250 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணையை அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு 50 கிராம் அதிமதுரப் பொடி மற்றும் 50 கிராம் சீரகப் பொடி போட்டு கலந்துவிட வேண்டும்.இந்த தைலத்தை ஆறவைத்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

இந்த தைலத்தை ஆசனவாய் பகுதியை சுற்றி அப்ளை செய்தால் மூலச்சூடு தணியும்.இந்த தைலத்தை தொப்புள் பகுதியில் தடவினால் உடல் சூடு தணியும்.

தேவையான பொருட்கள்:-

1)நல்லெண்ணெய் – 200 மில்லி
2)துளசி இலை – கால் கைப்பிடி
3)குப்பைமேனி இலை – கால் கைப்பிடி

செய்முறை விளக்கம்:

முதலில் துளசி இலை மற்றும் குப்பைமேனி இலையை தனி தனியாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.2 நிமிடங்கள் கழித்து அரைத்த துளசி இலைச்சாறு மற்றும் குப்பைமேனி இலை சாறு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

200 மில்லி நல்லெண்ணெய் சுண்டி 150 மில்லியாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த எண்ணையை ஆறவைத்து வைத்து தலை,ஆசனவாய் பகுதியில் தடவினால் சூடு தணியும்.