உடலில் படிந்துள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும் ஹெர்பல் உருண்டை!! தினமும் ஒன்று சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

உடலில் படிந்துள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும் ஹெர்பல் உருண்டை!! தினமும் ஒன்று சாப்பிடுங்கள்!!

நவீன காலகட்டத்தில் மோசமான உணவுமுறை பழக்கத்தால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.குறிப்பாக உடல் பருமன் பிரச்சனை விடாமல் துரத்துகிறது.ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்வதால் உடல் எடை கூடி விடுகிறது.

இதை ஆரம்ப நிலையில் கவனித்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதை செய்ய தவறினால் உடலில் அதிகளவு கெட்ட கொழுப்புகள் தேங்கிவிடும்.

உடலில் படிந்து கிடக்கும் கெட்ட கொழுப்புகள் கரைய இதை ட்ரை பண்ணுங்க.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை இலை
2)கோதுமை புல்
3)பாலக்கீரை
4)பப்பாளி இலை
5)வெந்தய விதை
6)திரிபலா பொடி

செய்முறை:-

1/4 கைப்பிடி அளவு முருங்கை இலை,பாலக்கீரை,பப்பாளி இலை மற்றும் கோதுமை புல்லை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.உலர்த்திய பொருட்கள் அனைத்தும் மொரு மொரு பதத்தில் இருக்க வேண்டும்.

பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.

பிறகு அதே வாணலியின் சூட்டில் ஒரு துண்டு பெருங்காயத்தை போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

இந்த இரண்டு பொருட்களையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொடியில் கலந்து விடவும்.பின்னர் இதில் திரிபலா பொடி 25 கிராம் அளவு கலந்து விடவும்.

பிறகு சிறிதளவு சுத்தமான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.இந்த உருண்டையை நிழலில் நன்கு காய வைத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தயாரித்து வைத்துள்ள மூலிகை உருண்டை ஒன்று சேர்த்து கலக்கவும்.பிறகு இந்த நீரை குடிக்கவும்.இவ்வாறு தினமும் குடித்து வந்தால் சில தினங்களிலேயே உடலில்இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.