கடும் வயிற்று வலியை குணப்படுத்தும் கை மருந்து!! ஒரு முயற்சியிலேயே பலன் கன்பார்ம்!!

Photo of author

By Divya

கடும் வயிற்று வலியை குணப்படுத்தும் கை மருந்து!! ஒரு முயற்சியிலேயே பலன் கன்பார்ம்!!

Divya

உங்களுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுகிறது என்றால் அலட்சியப்படுத்தாமல் இங்கு தரப்பட்டுள்ள கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.

வயிற்று வலி காரணங்கள்:-

*செரிமானப் பிரச்சனை
*வயிற்றுப் புண்
*பித்தப்பை கல்
*ஒவ்வாமை
*குடற்புழு
*இரைப்பை அல்லது கணைய அலர்ஜி

வயிற்று வலிக்கு சிறந்த கை மருந்து:

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அடுப்பில் வைத்து வறுக்க வேண்டும்.சீரகம் கருகிடாமல் வருக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சீரக பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு உப்பு கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை – ஒன்று
2)பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை தண்ணீரில் பிழிய வேண்டும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி அளவு பேக்கிங் சோடாவை அதில் சேர்த்து நன்றாக கலந்து பருக வேண்டும்.இந்த எலுமிச்சை பானம் வயிற்று வலியை குணப்படுத்தும் அற்புத மருந்தாக செயல்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)பட்டை – ஒரு துண்டு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

டீ வைக்கும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு துண்டு பட்டை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.

அடுத்து அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் வயிற்று வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை – சிறிதளவு
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

சிறிதளவு குப்பைமேனி இலையை சேகரித்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் வயிற்று வலி பாதிப்பு குணமாகும்.