ஆஸ்திரேலிய அணி செய்தது மிகப்பெரிய தவறு.. இதை செய்திருக்க கூடாது!! ஆஸி கேப்டன் காட்டம்!!

0
237
A huge mistake by the Australian team
A huge mistake by the Australian team

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனை கடுமையாக விமர்சித்துள்ளார் மைக்கேல் கிளார்க்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்  இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. மேலும் இந்த தொடரில் வென்ற பிறகு ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் வழங்கினார்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அங்குதான் இருந்தார். இருவர் பெயரிலும் உள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பையை இருவரும் சேர்ந்து வழங்கியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தவறு செய்து விட்டது. இது சிறிதளவும் சரி கிடையாது. எந்த அணி வென்றாலும் இருவரும் இணைந்து கோப்பையை வழங்கியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எனினும் கவாஸ்கர் இணைத்து வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் ஆனால் பரவாயில்லை என்று பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

Previous articleஒரே நாளில் பதிலடி கொடுத்த இந்தியா.. உங்களால முடிஞ்சத செய்ங்க!! பல்பு வாங்கிய  வங்கதேசம்!!
Next articleதிருப்பதியில் அமலாக்கப்பட்டது புதிய நடைமுறை!! அறங்காவலர் அறிவிப்பு!!