பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல் 43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!
தைப்பூசம் மற்றும் இருமுடி கட்டி செல்லுதல் போன்ற திருவிழாக்களை ஒட்டி பல்வேறு முக்கிய சலுகைகளை தென்னக ரயில்வே தற்போது அறிவித்து வருகிறது. அதன்படி முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கினாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். அடுத்த ஆண்டு வரவிருக்கும் முருகனுக்கு உகந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து பழனி கோவிலுக்கு செல்வர்.
இருமுடி கட்டுச் செல்லுதல் மற்றும் தைப்பூச திருவிழாவையொட்டி வருகின்ற 30-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 25-ஆம் தேதி வரையில் உள்ள காலகட்டத்தில் பாண்டியன், பொதிகை, நாகர்கோவில், வைகை, சேலம், கொல்லம், உழவன், சிலம்பு, ராமேஸ்வரம், மன்னார்குடி, புதுச்சேரி, போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஹம்சபார், அந்தியோதயா, லோக மான்ய திலக், சம்பர்க் கிராந்தி, போன்ற வெளி மாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 43 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் சுமார் இரண்டு நிமிடம் நின்று செல்லும்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க மற்றும் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கண்ட கால கட்டத்தில் இந்த ரயில்கள் மேல்மருவத்தில் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.