ஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிப்காட் நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. அந்த தனியார் நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு அந்த வாலிபர் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.  அப்போது அங்கு அவர் உணவருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.  இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அந்த வாலிபர் அவரது அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால் சக ஊழியர்கள் அந்த வாலிபரின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அந்த வாலிபர் மயங்கிய நிலையில் இருந்தார் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த   வாலிபரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள்  இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறினார்கள்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து  பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் இறந்த வாலிபர் பீகார் மாநிலம் நீர்ப்போர் பகுதியைச் சேர்ந்த உமேஷ் ராம் (41). என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் அங்கிருந்து வேலை நிமித்தம் காரணமாக ஈரோட்டிற்கு வந்து  சிப்காட்டில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவரின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு கூற முடியும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் உமேஷ் ராம் திடீரென உயிரிழந்த சம்பவம் அங்கு பணிபுரியும் சக உழியர்களின்  மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment