அரசியல் களத்தில் நேரத்தை பின்பற்ற முடியாமல் தவிக்கும் தவெக தலைவர்!!

Photo of author

By Gayathri

அரசியல் களத்தில் நேரத்தை பின்பற்ற முடியாமல் தவிக்கும் தவெக தலைவர்!!

Gayathri

A leader who is unable to follow the times in the political field!!

தமிழக வெற்றிக் கழகமானது வெற்றிகரமாக தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி அலுவலகத்தில் சிறப்பு விழாக்களுக்கு ஏற்பாடு செய்வதோடு தலைவர் விஜய் அவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்ற கட்சியின் கொள்கை தலைவர்களுடைய சிலைகளை திறந்து வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கக்கூடிய 120 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பினை முடிக்க வேண்டும் என தலைவர் விஜய் அவர்கள் முடிவெடுத்த பிறந்த நிலையில் தற்பொழுது அதனை முடிக்க முடியுமா என்ற குழப்பத்தில் அவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று ஜனவரி 28 அன்று 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து நேரடியாக ஆணை வழங்கிய தலைவர் அவர்கள் இன்று 19 மாவட்டங்கள் உடைய செயலாளர்களை பனையூரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவர்களுக்கான நியமன ஆணையை வழங்க இருப்பதாகவும் அதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் நாளை நியமனம் செய்யக்கூடிய மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக ஒரு நாளைக்கு 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமிக்க தொடங்கி இருக்கும் கட்சியின் தலைவரால் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் 120 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.