சற்றுமுன்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனி ஊக்கத்தொகை.. வெளிவந்த திடீர் அறிவிப்பு!! 

0
481
A little while ago: No more incentives for ration shop employees.. Sudden announcement!!
A little while ago: No more incentives for ration shop employees.. Sudden announcement!!

சற்றுமுன்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனி ஊக்கத்தொகை.. வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கொண்டு செலுத்தும் விதமாக ரேஷன் கடைகள் உள்ளது.தமிழகத்தில் தற்பொழுது அரசு பணியிடங்கள் பல துறைகளில் காலியாக உள்ள நிலையில் நியாய விலை கடைகளிலும் அதே நிலைதான் தொடர்கிறது நடந்து முடிந்த பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரொக்கத்தை பண்டிகை முடிவடைவதற்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் போதுமான பணியாட்கள் இல்லாததால் அனைவருக்கும் பொருட்களை வழங்குவதில் பணியாளர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

குறிப்பாக ஒரு சில இடங்களில் இரண்டு கடைகளை ஒரே பணியாளர் பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவு துறை ஆனது தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூடுதலாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு கார்டுக்கு ரூ 5 என்ற வீதத்தில் தமிழக அரசு கொடுக்கும்படி கேட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தான் நியாய விலை கடை ஊழியர்களுக்கு உயர் பதவி வழங்கப்பட்டது இது குறித்து தரவுகளை சமர்ப்பிக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளது. அதேபோல தற்பொழுது உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் மேற்கொண்டு காலி பணி இடங்களை நிரப்ப இது ஏதுவாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி உயர் பதவி வழங்கிய இடங்களில் அங்குள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்பும்மாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleலவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்!
Next articleஎங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!!