ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு!

0
152
A lorry fell into a lake in Erode district! Excitement in the area!
A lorry fell into a lake in Erode district! Excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (40). இவர் வாடகைக்கு லாரியில் செங்கல் சிமெண்ட் போன்ற பொருட்களை ஏற்றி தேவைப்பட்ட இடத்திற்கு சென்று இறங்குவார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மணி(60) மற்றும் ஜானகி (45) ஆகிய இருவரும் கூலிக்கு வேலை பார்த்து வருகின்றன.

மேலும் நேற்று இரவு தாரமங்கலத்தில்லிருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு செங்கல்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஆனது சென்று கொண்டிருந்தது. அப்போது  ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் அருகே லாரி ஆனது மெதுவாகச் சென்று கொண்டிருந்தது அப்போது லாரியை ஓட்டுநர் சுப்ரமணி  இயக்கி கொண்டிருந்தார்.

அந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து ஆப்பகூடல் அருகே உள்ள ஏரியில் பாய்ந்தது. இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் அதிக மனித நடமாட்டம் காணப்படவில்லை. இந்நிலையில் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சுப்பிரமணி, மணி மற்றும் ஜானகி ஆகிய மூவரும் உயிர் தரப்பினார்கள். விபத்தின்  பொழுது அப்பகுதியில் ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலையில் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்  பெயரில் சம்பவ இடத்திற்கு ஆப்பக்கூடல் போலீசார் வந்து  லாரியை ஏரியிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous articleமாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது!
Next articleஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!