மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் தோறும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது அதை உறுதி செய்யும் வகையில் இந்த செய்தி நடைபெற்றுள்ளது.
ராஜஸ்தானில் ஒரு பெண்ணை 5 பேர் துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடைக்குச் சென்று திரும்பி வந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை.
ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் சைபாவ் பகுதியை சேர்ந்தவர் இப்பெண்.
இவர் இரவு தனியாக கடைக்கு சென்றுள்ளார் சென்றுவிட்டு திரும்பி வந்த நிலையில் ஐந்து பேர் காரில் வந்து இறங்கியுள்ளனர் இறங்கியதும் அந்தப் பெண்ணிடம் விலாசம் கேட்பது போல் நடித்து ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றவரும் அவரை இழுத்து காரில் போட்டுள்ளனர்.
காரை எடுத்துக்கொண்டு ஒரு காட்டில் சென்று நிறுத்தியுள்ளனர்.அந்தப் பெண் பயங்கரமாக கூச்சலிடவே துப்பாக்கியை காட்டி எங்களுக்கு இணங்கா வீட்டில் உன்னை சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.
அந்தப் பெண் பயந்து விடவே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.திசை தெரியாத அந்தப் பெண் நடந்தே சென்று காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார் .அவர்கள் மது போதையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணிடம் புகாரை வாங்கிக் கொண்ட போலீசார் அந்த ஐந்து காம வெறி கொண்ட கொடூரர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொருநாளும் இந்த மாதிரியான காம வெறி செயல்கள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது எங்கே செல்கிறது பெண்களுக்கான பாதுகாப்பு ? ஏன் இதை நம்மால் தடுக்க முடியவில்லை என்ன காரணம்? இதனால் பொதுமக்கள் வெளியே வரவும் அச்சம் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.