பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது!

Photo of author

By Savitha

பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது. 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல்.

சென்னை பாரி முனை பகுதியில் கஞ்சாவை தெரிந்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சென்டிரல் இரயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலை மற்றும் ஐசக் சந்திப்பு அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது. அதில் பெருமளவு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த ஷேக் புட்டு (36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.