ஆன்லைன் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் இழப்பு

Photo of author

By Parthipan K

ஆன்லைன் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் இழப்பு

Parthipan K

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் 87 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தான் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணத்தை இழந்துள்ளார்.

விக்னேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 87 லட்சத்தை இழந்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகாரளித்துள்ளார்.

இந்த வழக்கானது சென்னை கமிஷனர் அலுவலகத்தின் மூலமாக சைபர் கிரைம்க்கு மாற்றப்பட்டது. சைபர் பிரிவு போலீசார் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

ஹரிகிருஷ்ணன் மகாபலிபுரத்தில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரிய வந்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.24.68 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்கள், 1 கார், 10 செல்போன்கள், ஐபேடு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.