ஓநாயாக மாறிய மனிதர்!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!!
ஜப்பான் நாட்டின் யூடியூபர் ஒருவர் சில நாட்களாகவே நாய் போன்று உடை அணிந்து கொண்டு அனைத்து பகுதிகளிலும் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது.
இவர் ஓநாய் போன்று உடை அணிந்து வருவது பார்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டோருஉவேடா என்ற இவர் சிறு வயதில் இருந்தே ஓநாய்கள் மீது மிகவும் பற்று உடையவர்.
எனவே, இவருக்கு தானும் ஒரு ஓநாய் போல மாற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் ஓநாய் போன்று ஒரு ஆடையை இவருக்கென்றே உருவாக்கி அதை அணிந்து உலாவி வருகிறார்.
இவரின் இந்த செயலை அனைவரும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த ஓநாய் ஆடையை அவர் இருபது லட்சம் ரூபாய் கொண்டு வடிவமைத்து இருக்கிறார்.
இது குறித்து இந்த ஓநாய் மனிதர் கூறி இருப்பதாவது, “ மனித உறவுகளில் இருந்து நான் விலகி விட்டேன்”. எனக்கு வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு வகையான பிரச்சனைகளை இது மறக்க உதவுகிறது.
மேலும், இவ்வாறு ஓநாய் ஆடை அணிந்து இருப்பதால் நான் மிகவும் ஆற்றலுடன் இருப்பதாக உணர்கிறேன். கண்ணாடியில் என் பிம்பத்தை பார்க்கும் போது அசலாக ஒரு ஓநாயை பார்ப்பது போலவே இருக்கிறது என்று பெருமிதமாக கூறி உள்ளார். இவரின் இந்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.