பெண்ணாக மாறிய ஆணை கழட்டிவிட்ட காதலன்!! தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை!!

Photo of author

By Divya

பெண்ணாக மாறிய ஆணை கழட்டிவிட்ட காதலன்!! தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை!!

 

நவீன காலத்தில் தன்பாலின ஈர்ப்பு என்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. திருநங்கைகள்,திருநம்பிகள்,ஓரின சேர்க்கையாளர்கள் அனைவரும் எல்.ஜி.பி.டி. என்ற சொல்லின் கீழ் ஒரு சமூகமாக அழைக்கப்படுகிறார்கள்.இந்த லெஸ்பியன் உறவை பல நாடுகள் ஆதரிக்கின்றது.ஒரு பெண்ணும் ஆணும் எப்படி காதல் மற்றும் காமத்தால்

ஈர்க்க படுகிறார்களோ அதே போன்று தான் ஓரின சேர்க்கையாளர்களின் காதல் உறவும் இருக்கும்.இதில் பெரும்பாலான உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.ஒரு சிலரின் உறவுகள் சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்து விடுகின்றது.இதற்கு மோகம் மற்றும் அன்பு குறைதல், சமூகத்தின் ஏளன பேச்சு போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

 

இவ்வாறு லெஸ்பியன் உறவில் ஈடுபட்டு காதலனால் கழட்டி விடப்பட்டு நடுத் தெருவிற்கு வந்த ஒரு ஆணின் செயல் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

 

அண்டை மாநிலமான ஆந்திராவில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.அம் மாநிலத்தின் விஜயவாடா நகரில் உள்ள கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர்கள் நாகேஸ்வர ராவ் மற்றும் பவன்.நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் ஒருவரையொருவர் விரும்ப தொடங்கினர்.இவர்களின் நெருக்கத்தை பார்த்து இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்து உள்ளனர்.ஆனால் இவர்கள் அதனை ஒரு விஷயமாக கருதாமல் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அவர்களின் காதலுக்கு அனைவரும் இடையூறாக இருப்பதாக எண்ணி இருவரும் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவியை போல் வாழத் தொடங்கினர்.இந்நிலையில் செலவிற்காக பணம் மற்றும் நகைகளை நாகேஸ்வர ராவிடம் பவன் கொடுத்து இருக்கிறார்.இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்று நாகேஸ்வர ராவ் பவனிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.நம்மில் ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்று இருவரும் முடிவெடுத்த நிலையில் பவன் பெண்ணாக மாற சம்மதித்தார்.

 

இதையடுத்து திருநங்கையாக மாறிய பவனை பார்த்து நீ அழகாக இல்லை.உன்னை திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று நாகேஸ்வர ராவ் கைவிரித்து விட்டார்.நாகேஸ்வர ராவ்வின் இந்த பேச்சு பவன் தலையில் இடியாக விழுந்தது.பிறகு தாம் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பவன் கிருஷ்ண லங்கா காவல் நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறி நாகேஸ்வர ராவ் மீது புகார் கொடுத்தார்.இதையடுத்து திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகேஸ்வர் ராவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.