நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!
தூத்துக்குடி ஸ்பிக்நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.. அந்த நிறுவனத்தில் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞான கணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில்
இந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 22 பைகளில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன மேலாளர் அருள்ஞான கணேஷிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அப்போது அவர் முன்னுக்கு பின்முரணாக பதில் கூறியுள்ளார். அதனால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து அருள்ஞான கணேஷ் தலைமறைவாகியுளார் மேலும் நிறுவனத்தின் சிறப்பு இயக்குனர் ராகவேந்திரன் முத்தையாபுரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அருள்ஞான கணேஷை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகை மாயமானது அந்த பகுதியில் பெரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.