இரத்தக் கழிவுகளை வடிகட்டும் மருந்து குழம்பு!! வாரத்தில் 2 நாள் சாப்பிடுங்கள் போதும்!!

0
4

நமது உடலில் பாயும் இரத்தத்தில் கழிவுகள் சேர்ந்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.இரத்தக் கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள மருந்து குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – நான்கு தேக்கரண்டி
2)காய்ந்த மிளகாய் – நான்கு
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)மிளகு – ஒரு தேக்கரண்டி
5)இஞ்சி – ஒரு துண்டு
6)பூண்டு பற்கள் – 10
7)ஓமம் – ஒரு தேக்கரண்டி
8)உளுந்து – ஒரு தேக்கரண்டி
9)புளி – ஒரு எலுமிச்சை சைஸ்
10)நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
11)கறிவேப்பிலை – ஒரு கொத்து
12)உப்பு – தேவையான அளவு
13)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
14)வெல்லம் – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் வர கொத்தமல்லி,மிளகாய்,மிளகு,வெந்தயம்,ஓமம்,கடுகு,சீரகம் போன்றவற்றை போட்டு வறுக்க வேண்டும்.

அதன் பிறகு அதே வாணலியில் கறிவேப்பிலை,ஒரு துண்டு இஞ்சி,ஒரு பல் பூண்டு பற்களை போட்டு வதக்க வேண்டும்.பிறகு வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பிறகு சிறிதளவு கடுகு,உளுந்து,வர மிளகாய் போட்டு வறுக்க வேண்டும்.அதன் பின்னர் அரைத்த விழுதை அதில் போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.இதனை நன்றாக கலந்துவிட வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு வெல்லத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த குழம்பு நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த குழம்பை சூடான சாதத்துடன் போட்டு சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கின்ற அழுக்கு கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.இரத்த விருத்தி அடைய இந்த குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிடுங்கள்.

Previous articleகாலையில் முக்காமல் மலம் வெளியேற.. இந்த பானத்தை எழுந்ததும் குடிங்க!!
Next articleசுகர் முதல் கொலஸ்ட்ரால் வரை.. 10 உடல் நலப் பிரச்சனைக்கு இந்த ஒரு பருப்பு போதும்!!